Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஐக்கிய நாடுகளின் சமாதானத் தூதுவர் பேரவையின் உறுப்பினராக அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி நியமனம்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையின் அங்கத்தவராக இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர், அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி நியமிக்கப்பட்டார். 


ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையினால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


சர்வதேச சமாதான மாநாடு ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நியமனச் சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதானத் தூதுவர், பேராசிரியர் டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்னாயக உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.






ஐக்கிய நாடுகளின் சமாதானத் தூதுவர் பேரவையின் உறுப்பினராக அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி நியமனம் Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 14, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.