ஐக்கிய தேசிய கட்சியின் பாலமுனை, காங்கேயனோடை வலய அமைப்பாளராக அஸ்மி நியமனம்.
மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் மன்முனைப்பற்று பிரதேச சபை பிரிவின் பாலமுனை, காங்கேயனோடை வட்டாரங்களை உள்ளடக்கிய வலய அமைப்பாளராக அபூதாஹிர் முஹம்மது அஸ்மி நியமிக்கப் பட்டுள்ளார்.
மேலும் வலய அமைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் AM.அஸ்மியின் நியமனக் கடித்தை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திரு ரங்கே பண்டாரவினால் கட்சியின் தலைமையமான சிரிகொத்தாவில் வைத்து அபூதாஹிர் முஹம்மது அஸ்மியிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
காத்தான்குடி, பாலமுனை, காங்கேயனோடை மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற AM.அஸ்மி ஒரு சிறந்த சமூக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஏ.எல்.டீன் பைரூஸ்)
ஐக்கிய தேசிய கட்சியின் பாலமுனை, காங்கேயனோடை வலய அமைப்பாளராக அஸ்மி நியமனம்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 28, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 28, 2024
Rating:

கருத்துகள் இல்லை: