Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

YESDO வின் ஏற்பாட்டில் பூப்பந்து சம்பியன் லீக் போட்டிகள் -2024

-எம்.பஹத் ஜுனைட்-

காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பின் விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் பூப்பந்து சம்பியன் லீக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (28) ULTRA Badminton Court இல் இடம்பெற்றது.


15 வயதுக்குட்பட்ட பிரிவு, 20 வயதிற்குட்பட்ட பிரிவு, 30 வயதுக்கு மேற்பட்ட பிரிவு,திறந்த பிரிவு என்று நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.


இப்போட்டியின் இறுதி நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் இமாஸா குழுமத்தின் பணிப்பாளர் ஏ.ஜீ.அஜ்வத் விஷேட அதிதியாக கலந்து கொண்டனர். அவர்களுடன் வைத்தியர் எஸ்.டீ.எம்.மாஹிர், என்.எம்.சுஹைல், ஏ.எம்.நபீல் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.


அத்துடன் இறுதிப் போட்டியில் திறமையாக விளையாடி வெற்றி பெற்ற வீரர்களுக்கு champion, runner up முறையாக வெற்றிக் கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





YESDO வின் ஏற்பாட்டில் பூப்பந்து சம்பியன் லீக் போட்டிகள் -2024 Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 29, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.