காத்தான்குடி வரலாற்றில் முதன்முறையாக 100 பேருக்கு ஒரே மேடையில் கௌரவம்
வாரவலம் ஊடக வலையமைப்பு அதன் இரண்டாவது ஆண்டு நிறைவை யொட்டி காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 துறைசார் பணியாளர்களுக்கு ஒரே மேடையில் விருது வழங்கி கௌரவிக்கிறது .
வாரவலம் ஊடக வலையமைப்பின் தலைவரும் வாரவலம் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் எதிர்வரும் 12ஆம் தேதி காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற ஏற்பாடாக இருக்கிறது.
துறைசார் பணியாளர்கள் நூறு பேருக்கு கௌரவம் அளிக்கின்ற அன்றைய நிகழ்வில் கௌரவம் பெறுவோர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய வேர்கள் எனும் சிறப்பு மலரும் வாரவலம் பத்திரிகையின் இரண்டாவது ஆண்டு சிறப்பு வெளியிடும் வெளியிடப்படவு ள்ளதாக வாரவலம் ஊடக வலையமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி றவூப் ஹக்கீம் கௌரவ அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எம் எஸ் எஸ் அமீர்அலி உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கனகசிங்கம் உட்பட பலர் சிறப்பு அதிதிகளாகவும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
வாரவலம் செய்தி பத்திரிகையின் இரண்டாவது ஆண்டு சிறப்பு மலரின் முதன்மை பிரதியை பிரபல தொழிலதிபரும் முபாறக்ஸ் டெக்ஸ் குறூப் பிரைவேட் லிமிடெட் தலைவருமான கலாநிதி எம் எஸ் எம் முபாரக் அவர்கள் பெற்றுக் கொள்வதுடன் சிறப்பு பிரதியை தொழிலதிபரும் சன்சைன் குறூப் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவருமான எஸ் நந்தகுமாரன் பெற்றுக் கொள்கிறார்.
ஆன்மீக அதிதிகளாக சங்கைக்குரிய பொகவந்தலாக ராகுல தேரர், மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மதானந்தாஜி மகராஜ், மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர், சங்கைக்குரிய மௌலானா மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆகியோர் மட்டம் கலந்து கொள்கின்றனர்
ஊடக அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தினகரன்,தினகரன் வாரமஞ்சரின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், கெப்பிட்டல் டிவி செய்தி பிரிவு பொறுப்பாளர் எம்.நௌஷாத் முஹைதீன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா தமிழ் செய்தி பணிப்பாளர் சி பி எம் சியாம், வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் எம் சித்திக் ஹனிபா மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி எம். ஜீவானந்தம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்
வாரவலம் செய்திப் பத்திரிகையும் அச்சு ஊடகத்தின் அவசியமும் என்ற தொனிப் பொருளில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் நௌசாத் முஹிதீன் சிறப்புரையாற்றும் இந்நிகழ்வில் நூறு பல்துறை சார்ந்த சமுக பணியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட வுள்ளதுடன் குறித்த நிகழ்வை பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் அஸ்ஸெய்யத் இர்ஃபான் மௌலானா தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி வரலாற்றில் முதன்முறையாக 100 பேருக்கு ஒரே மேடையில் கௌரவம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 29, 2024
Rating:

கருத்துகள் இல்லை: