Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறப்பு

 பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று (25/06/2024) திறந்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 26, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.