Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

"வெல்வோம் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை எதிர்வரும் (வெள்ளி, சனி) திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடு முழுவதும் நடாத்தப்படும் "வெல்வோம் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இம்மாதம் 28,29 ஆம் (வெள்ளி, சனி) திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் ஊழியர்களை பதிவு செய்தல், B பத்திரங்களை வழங்குதல், பின்னுரித்தாளிகள் மாற்றம் செய்தல், ஓய்வுக்கு முன்னரான ஊழியர் சேமலாப நிதி மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பான அறிவுறுத்தல்கள், 30% மீளளிப்பு நலனுக்கான உரித்துடமையை பரீட்சித்தல், ஊசே.நிதியை பிணையாக வைத்து வீட்டுக்கடன் பெற்று கொள்வது தொடர்பான வழிகாட்டல்கள், ஓய்வூதிய மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்வது தொடர்பான அறிவுரை, இறந்த ஊழியர்களின் பின்னுரித்தாளிகளுக்கு ஊழியர் சேமலாப நிதிய மீளளிப்புகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான அறிவுரை, மற்றும் பிற சேவைகள் என சேவைகளைளையும் பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்ப்வர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தொழில் அலுவலகத்தின் உதவி தொழில் ஆணையாளரைத் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


"வெல்வோம் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை எதிர்வரும் (வெள்ளி, சனி) திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 26, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.