Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஏரூர் மண்ணின் மற்றுமொரு ஆளுமை கல்முனை மாநகரின் விசேட ஆணையாளராக நியமனம்


கிழக்கு பிராந்தியத்தின் முகவெற்றிலையாம் கல்முனை மாநகரின் விசேட ஆணையாளராக என்.எம். நௌபீஸ் (SLAS)

கிழக்கு மாகாண Management Development Training Unit மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்ற என்.எம்.நெளபீஸ் கிழக்கு மாகாண Management Development Training Unit மாகாணப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக 
 கல்முனை மாநகர சபையின் விசேட ஆணையாளர்  நியமிக்கப்பட்டு அதற்கான நியமனம் கடிதம் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக கல்முனை மாநகர சபையின் விசேட ஆணையாளராக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக  ஏறாவூர் நகர சபையின் செயலாளராக குறுகிய காலம் மற்றும் கிண்ணி நகர சபையின் செயலாளராக மற்றும் கிழக்கு மாகாண  விளையாட்டு பணிப்பாளர் என்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு உயர் பதவிகளில் சிறப்பாக செலாற்றிய அனுபவத்தை கொண்ட  ஏறாவூர் மண்ணின் ஆளுமைகளில் ஒருவர் என்.எம்.நெளபீஸ் (SLAS) கல்முனை மாநகர சபையின் விசேட ஆணையாளராக நியமிக்கப்பட்டதன் மூலம்  கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட   கல்முனை மாநகர சபையின் பணிகள் என்.எம்.நெளபீஸ் (SLAS) அவர்களின்   அனுபவம் மற்றும் அர்பணித்த உழைப்பு நேர்த்தியான திட்டமிடலினால் சிறப்புற உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

MSM.நவாஸ்டீன் 

ஏரூர் மண்ணின் மற்றுமொரு ஆளுமை கல்முனை மாநகரின் விசேட ஆணையாளராக நியமனம் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 14, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.