அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரிணிக்குமிடையிலான சந்திப்பு..
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (25) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, பிரிவெனா ஆசிரியர் சேவை உள்ளிட்ட சேவைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் அதிபர், ஆசிரியர்கள் சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரிணிக்குமிடையிலான சந்திப்பு..
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 26, 2024
Rating:

கருத்துகள் இல்லை: