அதிக வெப்பநிலை காரணமாக நீரிழப்பு நிலை ஏற்படக்கூடும் - இலங்கை மருத்துவர்கள் சங்கம்
தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையுடன் ஏற்பட்டுள்ள அதிக வெப்பநிலை காரணமாக உடம்பில் நீரிழப்பு நிலை ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது விசேடமாக உடம்பில் அதிக அளவில் வியர்வை அதிகரித்து வெளியேறுவதனால் உடம்பில் நீரில் அளவு குறைவடையக் கூடியதாகவிருப்பதுடன் இந்த நிலை அதிகரிப்பதனால் உடலுக்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாது என இச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதனால் மயக்கம் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் நீரிழப்பு நிலையினால் சில இயலாமை நிலையும் ஏற்படக்கூடும். அதனால் இந்த நிலையை தடுப்பதற்காக செயல்பட வேண்டும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக நீரிழப்பு நிலை ஏற்படக்கூடும் - இலங்கை மருத்துவர்கள் சங்கம்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 18, 2025
Rating:

கருத்துகள் இல்லை: