காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ .ஆதம்பாவாவுக்கும் இடையிலான சந்திப்பு..
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் குழுவினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ .ஆதம்பாவாவுக்கும் இடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (26) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பிலும், கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பில் அரசியலமைப்பு சபை உறுப்பினரும் அம்பாறை கரையோர மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான . ஏ ஆதம்பாவாவுடன் கலந்துரையாடப்பட்டது.
சம்மேளனத்தின் உப தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியா, நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன் , முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிதவிசாளர் எம்.எம்.அப்துர்ரஹ்மான், மற்றும் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் , சம்மேளன பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர
காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ .ஆதம்பாவாவுக்கும் இடையிலான சந்திப்பு..
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: