காத்தான்குடி காழி நீதிமன்றம் தொடர்பாக
அன்புப் பொதுமக்களுக்கு காழி நீதிமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹு
எமது பிரதேச காழி நீதிபதி தனது பதவியினை இராஜினாமா செய்ததனையடுத்து பதில் காழி நீதிபதியாக ஏறாவூர் காழி நீதிமன்ற நீதிபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் தனது கடமைகளினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்கள்.
அந்தவகையில், இன்ஷா அள்ளாஹ் நாளை செவ்வாய்க்கிழமை காலை 09: 00 மணி தொடக்கம் காழி நீதிமன்றத்தின் செயற்பாடுகளினை முன்னெடுக்கும் முகமாக வருகை தரவுள்ளார்கள்.
காழி நீதிமன்றத்தின் செயற்பாடுகள் யாவும் இன்ஷா அள்ளாஹ் நாளைய தினம் மாத்திரம் இடம் பெறவுள்ளதுடன் அதற்கடுத்த செயற்பாடுகள் எதிர்வரும் புனித ரமலான் மாதத்தின் பின்னரே இடம்பெரும் என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
எனவே பொதுமக்கள் இது விடயமாக கவனம் செலுத்துவதுடன் தேவையுடையவர்கள் மேற்படி சேவைகளினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
இவ்வண்ணம்,
தலைவர் / செயலாளர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,
காத்தான்குடி
24.02.2025
காத்தான்குடி காழி நீதிமன்றம் தொடர்பாக
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: