Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி திருமதி செவரின் சபாஸுக்கும் (Ms.Severine Chappaz) இடையிலான சந்திப்பு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆதரவை வழங்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அதன்படி, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் திறன் மேம்பாட்டிற்காகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பாடு தெரிவித்தது.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

இன மத பேதமின்றி , ஒரே இலங்கை தேசமாக ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லும் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக "Sri Lankan Day" கொண்டாட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

1989 ஆம் ஆண்டு முதல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி அதற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் திருமதி ருவந்தி ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 25, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.