மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட ஊடகப் பிரிவினால் கௌரவம்!
மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் அரச தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வும், மூத்த ஊடகவியலாளர்களை விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் அண்மையில் மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை வளாகத்தில் உள்ள மாவட்ட செய்லக மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கும் அரச தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப் பிரிவின் செயற்பாடுகளிற்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கி, பல்வேறுபட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை ஆற்றிவரும் சிறந்த சேவையினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மூத்த ஊடகவியலாளர்கள் 10 பேரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய "ஊடக தடம்" எனும் நூலின் பிரதி இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கும், மேலதிக அரசாங்க அதிபர்களுக்கும், உதவி மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த், திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் உள்ளிட்ட ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
அத்தோடு ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் மற்றும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் இ.கமால்டீன் ஆகியோரது அர்ப்பணிப்பு மிக்க சேவையினை பாராட்டி மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுச் சினனம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட ஊடகப் பிரிவினால் கௌரவம்!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 04, 2025
Rating:

கருத்துகள் இல்லை: