(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைப்பிரதிநிதிகள்,
செயற்பாட்டாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று மாலை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி, எதிர்வருகின்ற பிரதேச சபைத்தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.
இதில் நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைப்பிரதிநிதிகள் உட்பட மண்டபம் நிறைந்த, ஏராளமான
செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை: