தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வெற்றிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரல்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வம் காட்டும் மற்றும் தகைமையுடைய தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அதற்கமைய, www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான (தேபொஆ) உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்படல் வேண்டும்.
முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 04 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில், 'அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை - அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே.' எனும் முகவரிக்கு அல்லது
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

கருத்துகள் இல்லை: