விளையாட்டு வாரத்தை முன்னிட்டு போஷாக்குத் தொடர்பான தெளிவூட்டல் மட்டக்களப்பில்
போஷாக்குத் தொடர்பாகத் தெளிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (21) நடைபெற்றது.
தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு போஷாக்கின் முக்கியத்துவம் குறித்து தெளிவு படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் வைத்தியர் சிவலிங்கம் விவேகானந்தன் வளவாளராகக் கலந்து கொண்டு போஷாக்குத் தொடர்பான விரிவாகத் தெளிவு படுத்தினார்.
போஷாக்கு மூலம் புத்திஜீவிகளை உருவாக்க முடியும். ஊட்டச்சத்து 2 வயது வரை சரியாக ஊட்டப்பட்டால் ஆரோக்கியமான சமூகத்திற்கான புத்திஜீவிகள் உருவாகுவார்கள். தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான போசனை ஊட்டப்படுவதுடன், வாழ்க்கை முறை மற்றும் மனப்பாங்கில் ஆரோக்கியத்தின் வெற்றி தங்கியுள்ளது.
தொற்றா நோய்களில் அழுத்தம் என்பது மாத்திரம் ஒரு மனிதனை இலகுவாகக் கொன்று விடுவதற்கு போதுமானது. அது வாழ்க்கையிலும் வாழ்கின்ற முறையிலும் தங்கியுள்ளது. தொற்றா நோய்களைப் பொறுத்தவரை போஷாக்கான உணவு ஊட்டப்பட்டால் ஒரு வயதில் இருந்தே கொழுப்பு படிய ஆரம்பித்து, தற்காலத்தில் அதிகமாகக் காணப்படும் கொலஸ்ரோல் போன்றவற்றை உருவாக்கும்.
எனவே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு உணவில் நிலைபேறாண நிலை பேணப்பட வேண்டும். குறிப்பாக உள்ளூர் பழவகைகள் மற்றும் இலைக் காய்கறிகளை பாரம்பரியமானவை, தற்காலத்திற்குப் பொறுத்தவரை என ஒதுக்கி விடாது, அவற்றை உணவிற்கு பயன்படுத்துவதன் அவசியம் தெளிவு படுத்தப்பட்டதுடன் அவற்றில் பேண்தகு நிலை பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: