புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் புதிய மறுசீரமைப்பில் பாடவிதான மொடியூல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
அவ்வாறு கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிருவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு உட்பட நிறுவனங்களுக்கு இடையில் காணப்பட வேண்டிய பரஸ்பர தொடர்புகளின் முக்கியத்துவம் மற்றும் அதனால் கல்வித்துறையில் நிகழும் அபிவிருத்தி குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கல்வி முறையில் காணப்படும் சமத்துவமின்மையை எமது பிரதான குறிக்கோளாகும். அதன்படி சில பிள்ளைகள் மாத்திரம் அன்றி சகல பிள்ளைகளுக்கும் எமது கல்வி முறையில் வரவேற்கக்கடிய இடத்திற்கு வர முடியுமான கல்வி முறை ஒன்றை உருவாக்குவதே எமது அடிப்படை நோக்கமாகும். என பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் இந்த புதிய கல்வி சீர்திருத்தத்திற்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் மிகவும் முக்கியமானவை என்றும் எதிர்காலத்தில் கல்வி மறு சீரமைப்புத் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் சகல ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுவது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: