புதிய தொழில்நுட்பத்தை கற்பதற்காக சீன. Huawei நிறுவனத்தின் மூலமாக இந்நாட்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்... கல்வி மற்றும் உயர்க்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன
உலகின் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் முன்னேறி அதன் முடிவுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும் Huawei புலமைப்பரிசில்களை வென்ற இலங்கை மாணவர்களுக்கு இயலும் என்றும் இவ்வாறான திட்டங்கள் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புப் பாலம் தொடர்பாக மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரா செனவிரத்ன கூறினார்.
அண்மையில் (13) கொழும்பில் நடந்த புலமைப்பரிசில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதி அமைச்சர்
இந்த புலமைப்பரிசில் செயற்றிட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அது தொழில்நுட்ப பயிற்சிக்கு அப்பால் சென்று, நமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த அறிவு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலாசார பரிமாற்றத்தை அணுகுவதற்கான வழியைத் திறந்துள்ளது. அடுத்த தலைமுறை தலைவர்கள் மற்றும் புதிய உற்பத்தியாளர்களை எவ்வாறு நேரடியாக வலுவூட்ட முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நமது மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் சாதனைகள் உங்கள் சொந்த எதிர்காலத்தை வடிவமைப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் கனவு காணவும் உயர்ந்த இலக்குகளை அடையவும் இது ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
பேராதனை, களனி, ருஹுணு, மொரட்டுவ, வடமேல் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த திறமைகளைக் கொண்ட இளம் மாணவர்கள் இந்த ஆண்டு உதவித்தொகைகளைப் பெற முடிந்ததுடன்,இந்த நிகழ்வில் சீனத் தூதர் திரு. Qi Zhenhong அவர்கள் Huawei Technologies Lanka நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Mr. Zhang Jinse, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: