கல்முனை Rays of Light பாலர் பாடசாலையில் சிறுவர்களின் சிறப்பு சிறுவர் சந்தை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை சாஹிபு வீதியில் 15 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் Rays of Light பாலர் பாடசாலையில் சிறுவர்களின் வண்ண மயமான சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மாணவர்களின் ஆளுமை விருத்தியில் நேர்மறையான தாக்கங்களினை செலுத்தும் முன்வருதல், கணிப்பு திறன், பங்கேற்றல், தொடர்பாடல், சந்தைப் படுத்தல், ஆக்கதிறன், தன்நம்பிக்கை, ஒன்றித்து செயற்படுதல் போன்ற பல விடயங்களில் செல்வாக்குச் செலுத்தும் வகையில் முன்பள்ளி கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு விடயதானமாக சிறுவர் சந்தை நிகழ்வு உள்ளது.
இந்த வகையில் Rays of Light மாணவர்கள் இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி தமது திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.
பாடசாலையின் அதிபர் றீபா ஹுசைன் (Rtd. SLPS-I) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம். பழீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, இயற்கை விவசாயி சுற்றுச்சூழல் ஆர்வலர் பொறியியலாளர் றிலா மர்சூக், பாடசாலையின் நிர்வாகப் பணிப்பாளரும் சிரேஷ்ட உளவளத்துணையாளருமான வருகை தரு விரிவுரையாளர் (திறந்த பல்கலைக்கழகம்) எம்.எம். ஹப்றாத், பாடசாலையின் ஆங்கில கலைத்திட்டத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் திருமதி எம்.எச். சைறோஸ் பானு (BA - HNDE) மற்றும் ஆசிரியர்களான செல்வி எஸ்.தமீனா, திருமதி கே. பெளமி உட்பட பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என ப்பலரும் கலந்து கொண்டு சிறுவர் சந்தையினை வெற்றிகரமாக மாற்றினர்.
இந்நிகழ்வு தாருஸ்ஸபா முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதும் விஷேட அம்சமாகும்
கல்முனை Rays of Light பாலர் பாடசாலையில் சிறுவர்களின் சிறப்பு சிறுவர் சந்தை
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: