தேசிய மக்கள் சக்தியினால் காத்தான்குடி நகரசபைக்கு இயந்திரம் ஒன்றினைப் பொருத்துவதற்காக 52 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு..
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் காத்தான்குடி நகரசபையின் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தில் சேரும் உக்காக் குப்பைகளைத் தரம்பிரித்து மீழ் சுழற்சி செய்யும் வகையிலான Meterial Recovery Facility (MRF) இயந்திரம் ஒன்றினைப் பொருத்துவதற்காக 52 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
காத்தான்குடியில் நாளாந்தம் சேகரிக்கப்படும் உக்காக் கழிவுகளை முகாமை செய்வதில் காத்தான்குடி நகரசபை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததோடு கழிவு முகாமைத்துவ நிலையம் அமைந்திருக்கும் பகுதி குடியிருப்பாளர்களும் பல்வேறு சவால்களுக்கு நாளாந்தம் முகங்கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலமைகளைக் கருத்திற்கொண்டே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நிதி ஒதுக்கீட்டினைச் சைய்துள்ளது.
இங்கு பொருத்தப்படும் MRF இயந்திரத்தினூடாக உக்காக்குப்பைகளை பிளாஸ்டிக்,காகிதம், உலோகம்,கண்ணாடி, என தனித்தனியாப் பிரித்தெடுத்து மீழ் சுழற்சிக்குப் பயன் படுத்தமுடியும்.
இவ்வேலைத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு எதிர்வரும் வாரமளவில் காத்தான்குடி நகரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறான மிகப் பெறுமதியான வேலைத்திட்டங்களை காத்தான்குடிக்கு பெற்றுக் கொள்வதற்கு கடந்த மூன்று தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்திக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
(ஊடகப்பிரிவு-தேசிய மக்கள் சக்தி)
தேசிய மக்கள் சக்தியினால் காத்தான்குடி நகரசபைக்கு இயந்திரம் ஒன்றினைப் பொருத்துவதற்காக 52 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு..
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2025
Rating:




கருத்துகள் இல்லை: