அபிவிருத்தித் திட்டங்களில் தாமதத்தைத் தவிர்ப்பதை முக்கிய பணியாகக் கருதுங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
பொது மக்களுக்கு நெருக்கமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்.
மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, அவற்றின் நன்மைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்களுக்கு வழங்குவது, மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும்போது, அது நிறைவடையும் வரை இலக்கு மயப்பட்ட திட்டத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
விவசாயிகளின் பயிர்ச் செய்கை நிலங்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க முறையான பொறிமுறை அவசியம். மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்.
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்யத் தவறியதாலும்,அவற்றின் திட்டக் காலங்களை நீடித்து, மதிப்பிடப்பட்ட செலவை அதிகரித்ததால், அந்த திட்டங்களின் நன்மைகளையும் முதலீடு செய்த நிதியின் பிரதிபலன்களையும் நாடு இழந்துள்ளது என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உரிய நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் (06) பிற்பகல் நடைபெற்ற மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 07, 2025
Rating:

கருத்துகள் இல்லை: