ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக பைரூஸ் காத்தான்குடி மீடியா போரத்தின் வாழ்த்துச் செய்தி
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30வது ஆண்டு விழாவும் நடப்பாண்டிற்கான நிருவாகத் தெரிவும் கடந்த சனிக்கிழமை (27) கொழும்பில் தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊடகத் துறையின் முக்கியஸ்தர்களும், சமூகப் பிரதிநிதிகளும் இராஜதந்திாிகளும் கலந்து கொண்டனா்.
அடுத்து, விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பி.எம். பைரூஸ் அவர்கள், பெரும்பான்மை வாக்குகளால் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமை பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இவரது நீண்டகால ஊடகச் சேவைகள், சமூகப் பிரச்சினைகளை ஆழமாக எடுத்துரைத்த பங்களிப்புகள், ஊடகத் துறையில் கொண்டிருக்கும் அனுபவமும் ஆளுமையும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் பரவலாக பாராட்டப்பட்டவை ஆகும்.
குறிப்பாக, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல், இளைஞர்களை ஊடகத் துறையில் ஈடுபடச் செய்தல், மற்றும் சமூகத்தின் நலனுக்காக ஊடகக் கடமைகளை சிரத்தையுடன் நிறைவேற்றல் ஆகியவற்றில் அவரது வகிபாகம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எம்.பி.எம். பைரூஸ் அவர்கள், எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தை மேலும் வலுப்படுத்தி, இடைவெளிகளை சீா்செய்து தேசிய மட்டத்தில் முஸ்லிம் ஊடகவியலாளா்களுக்கிடையேயான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்த்தெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.எம். பைரூஸ் அவர்களுக்கும், செயலாளராக தொிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளா் ஷம்ஸ் பாஹிம் அவர்களுக்கும் புதிய நிருவாக சபையினருக்கும், எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்.பி.எம்.பைரூஸ் அவர்களின் தலைமையில் ஊடகத்துறைக்கு புதிய உந்துதல் கிடைக்கும் என்றும், சமூக முன்னேற்றத்திற்கு அது பெரும் ஆதாரமாக அமையும் என்றும் எதிா்பாா்க்கிறோம்.
எம்.எஸ்.எம். நூா்தீன்,தலைவர்
எம்.ஐ. அப்துல் நஸார்,
செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக பைரூஸ் காத்தான்குடி மீடியா போரத்தின் வாழ்த்துச் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 30, 2025
Rating:

கருத்துகள் இல்லை: