மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் வாழ்த்துச் செய்தி
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாக தனது கடமைகளினை கடந்த 2025.09.26ஆம் திகதி பொறுப்பேற்றுள்ள திரு. JS. அருள்ராஜ் (SLAS) அவர்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் வாழ்த்துச் செய்தி
திரு.JS.அருள்ராஜ் (SLAS) அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும்,
மட்டக்களப்பு.உளமாற வாழ்த்துகிறோம்...
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும் மாவட்ட செயலாளராகவும் தாங்கள் நியமிக்கப்பட்டமைக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்லின சமூக கலாசார பண்பாட்டு விழுமியங்களை கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களினதும் சுபீட்சத்துக்கும் அவர்களினது தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய மக்கள் சேவகனாக தங்களை நாம் காண்கிறோம்..
அந்தவகையில், எமது மாவட்டத்தின் அரசாங்க அதிபராகவும் மாவட்ட செயலாளராகவும் கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் தாங்கள் மாவட்டத்தின் சகல துறைகளிலும்; கூடுதலான பங்களிப்புகளினை வழங்குவீர்கள் என நாம் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், தங்களது பணி சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு தங்களது சிறப்பான பணிக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
இவ்வண்ணம்,
தலைவர்/பொதுச் செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி
2025.09.29
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் வாழ்த்துச் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 30, 2025
Rating:

கருத்துகள் இல்லை: