முறக்கட்டான் சேனை இராணுவ முகாம் வளாகம் பாடசாலையிடம் கையளிப்பு.
வரலாற்றுத் திருப்புமுனை,
முறக்கொட்டான் சேனை படைமுகாம் அகற்றப்பற்று 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களுக்கு மீள்கொடுக்கப்பட்ட நிகழ்வு இன்று 30-09-2025 திங்கட்கிழமை இராணுவ முகாம் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக இடம் பெற்றது.
அந்த வகையில், கிழக்கு மாகாண மட்டக்களப்பு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வந்த முறக்கொட்டான் சேனை இராமகிருஷ்னா பாடசாலை வளாகத்தில் இயங்கிய குறித்த இராணுவ முகாமானது தற்போது முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி பாடசாலை நிருவாகத்திடமும் மக்களிடமும் மீள ஒப்படைக்கப்டும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கைத்தொழில் துறை அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட. பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுதலைவருமான கந்தசாமி பிரபு ஆகியோர் கலந்து முகாம் இருந்த நிலத்தினை உரியவர்களிடம் கையளித்தனர்
சுமார் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த நிலப் பிரச்சினைக்கு, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளது என்பதற்கும் அப்பால் தேசிய மக்கள் சக்தியை விமர்சித்து வரும் போலியான தமிழ்த்தேசியவாதம் பேசும் அரசியல் சக்திகளின் வாய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள பாடசாலைக் காணியினை விடுவித்து மீண்டும் பாடசாலைக்கு அந்த நிலத்தைக் கைளிக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்
, மாவட்ட செயலாளர் அருள்ராஜ், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் சித்திரவேல், மாகண கல்விப்பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment #dccbatticaloa
#sunilhandunneththi
முறக்கட்டான் சேனை இராணுவ முகாம் வளாகம் பாடசாலையிடம் கையளிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 30, 2025
Rating:

கருத்துகள் இல்லை: