காங்கேயனோடையில் வடிகால் அமைக்கும் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா.!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 500 மீட்டருக்கு உட்பட்ட வடிகாண் அமைக்கும் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா (29) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே. அப்துல்லா, சுற்றாடல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோர்
கலந்துகொண்டனர்.
கௌரவ அதிதிகளாக தேசிய மக்கள் சக்தி மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான எம்.சி.எம். பௌசான், எஸ்.எம். ரம்ஸீன், கே. சங்கவி, எம். களிஸ்டன் உட்பட அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நீண்ட காலமாக காங்கேயனோடை மக்களை பாதித்து வரும் மழைக்கால நீர் பெருக்கு மற்றும் சுகாதார சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டம் அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
காங்கேயனோடையில் வடிகால் அமைக்கும் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா.!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 30, 2025
Rating:

கருத்துகள் இல்லை: