காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவர் எம்.பீ.எம். பைறூஸுக்கு கௌரவிப்பு!
(ஏ.எல்.எம். சபீக்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பீ.எம். பைறூஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதையொட்டி, அவரை பாராட்டியும் கௌரவித்தும் வரவேற்கும் நிகழ்வு இன்று (04) சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி நாஸ் கெம்பஸ் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். நூர்தீன் தலைமையில், பொதுச் செயலாளர் எம்.ஐ. அப்துல் நஸார் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் ஆயுட்காலத் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) உரையாற்றியதுடன், தலைமையுரையை தலைவர் எம்.எஸ்.எம். நூர்தீன் நிகழ்த்தினார்.
சிறப்பு நிகழ்வாக, புதிய தலைவருக்கு கற்பித்த ஆசியர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஆசிரியர் வித்யாகீர்த்தி எம்.எம். அமீர் அலி அவர்கள் கவிதை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, புதிய தலைவரான எம்.பீ.எம். பைறூஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம், நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அப்துல் கபூர் (மதனி), ஊர் பிரமுகர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பீ.எம். பைறூஸ் அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி ஊரை தழுவிய பெரும் வரவேற்புடன் நிகழ்ந்த இந்நிகழ்வு, ஊடகவியலாளர் சமூகத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவர் எம்.பீ.எம். பைறூஸுக்கு கௌரவிப்பு!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 04, 2025
Rating:

கருத்துகள் இல்லை: