பணயக் கைதிகள் விடுவிப்புக்கு தயார்: உலக நாடுகள் வரவேற்பு!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுள்ள நிலையில், அதனை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவை அமைதிக்கான முக்கிய படியாக சுட்டிக்காட்டியுள்ளன.
பணயக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும். இரு தரப்புகளும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டார்.
ஹமாஸின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றது. இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை: