ஒன்றாக சாதித்தோம், ஒன்றாக கொண்டாடுவோம் - ULTRA ALUMINIUM (PVT) Ltd நிகழ்வு.!
(எம்.ரி.எம்.யூனுஸ்,
பஹத் ஜூனைட்)
ஆரையம்பதி பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல அலுமினியம் தயாரிப்பு நிறுவனமான ULTRA ALUMINIUM (PVT) Ltd இன் புதிய இயங்குனர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) சனிக்கிழமை நிறுவனத்தில் இடம்பெற்றது.
"ஒன்றாக நாம் சாதித்தோம், ஒன்றாக நாம் கொண்டாடுவோம்" எனும் கருப்பொருளின் கீழ் நிறுவனத்தின் தவிசாளர் ஏ.எம். உனைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் ஸ்தாபகர் ஐ.எல்.எம். அக்பர், இயக்குனர்களான எம்.ஐ.எம். ஜவ்பர், எம்.ஜே.எம். ஜெஸ்லான், மற்றும் ஊழியர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், பிரியந்த குமார தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் இயக்குனராக நியமிக்கப்பட்டதுடன், கே.எல்.எம். அஸ்மல், எம்.யூ.எம். யஹ்யா, எஸ்.எம். முஸ்லிஹ், ஏ.ஏ. அழ்பர் ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஒன்றாக சாதித்தோம், ஒன்றாக கொண்டாடுவோம் - ULTRA ALUMINIUM (PVT) Ltd நிகழ்வு.!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 04, 2025
Rating:

கருத்துகள் இல்லை: