மட்டு மாவட்ட அரசாங்க அதிபருடன் ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு சந்திப்பு
மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் கே.எஸ். அருள்ராஜுடன் ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு சிநேகபூர்வ சந்திப்பினை மேற் கொண்டனர்.
புதிதாக நியமனம் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.எஸ். அருள்ராஜ் அவர்களுக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு இன்று (03.10.2025) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இச் சந்திப்பின் போது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்
ஏ.எல்.அஹமட்ஷிப்லி (ஆசிரியர்) அவர்களின் தலைமையிலான நிறைவேற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் இனநல்லுறவு, நல்லிணக்கம், அபிவிருத்தி, மனித நலன்,சமூக மேம்பாடு போன்ற பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு எதிர்காலத்தில் அரச வேலைத்திட்டங்களில் பரஸ்பரம் இணைந்து செயற்படுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டு மாவட்ட அரசாங்க அதிபருடன் ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 04, 2025
Rating:

கருத்துகள் இல்லை: