உலக சிறுவர் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற; மாபெரும் இலவச வைத்திய முகாம்.!
(எம்.ரி.எம்.யூனுஸ்,
எம்.பஹத் ஜுனைட்)
உலக சிறுவர் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வழிகாட்டுதலில் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத தள வைத்தியசாலையின் பங்களிப்புடன் மாபெரும் இலவச வைத்திய முகாம் இன்று (04) சனிக்கிழமை காத்தான்குடி சாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் இடம்பெற்றது .
சர்வதேச வெற்றி பெற்றவர்களின் பாதை – நலன்புரி அமைப்பின் தலைவர் ஜே.எம்.நஸார் தலைமையில் இடம்பெற்ற இவ் வைத்திய முகாமில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மவ்ஜூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் எம்.சி.எம்.ஏ. சத்தார், ஆயுள் வேத வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், தாதிய உதியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உலக சிறுவர் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற; மாபெரும் இலவச வைத்திய முகாம்.!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 04, 2025
Rating:

கருத்துகள் இல்லை: