காத்தான்குடி அல் இக்பாலின் வரலாற்றுச் சாதனை
மட்டடக்களப்பு மத்தி வலயம், காத்தான்குடிஅல் இக்பால் வித்தியாலயம், இம்முறையும் தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளது.
மேற்படி பாடசாலையில் இம்முறை வெளியாகிய 2025 தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 03 மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சென்ற வருடம் 02 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பெறு பேற்றைப் பெறுவதற்கு காரணமாக இருந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியை திருமதி.BAN.Roshana மற்றும் ஆரம்பப் பிரிவில் கற்பித்த ஏனைய ஆசிரியர்கள், அதிபர் , பிரதி அதிபர்,
மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை நிருவாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தியினைப் பெற்றுள்ளமையும் 03 மாணவர்களும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையும் பாடசாலையின் வரலாற்றுச் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
VM.ஹனிபா.
அதிபர்
மட்/மம/அல் இக்பால் வித்...றிஸ்வி நகர்,
காத்தான்குடி.
காத்தான்குடி அல் இக்பாலின் வரலாற்றுச் சாதனை
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: