காத்தான்குடி பஸ்லா பர்ஸான் எழுதிய "புரிந்து தெளிக" சிறப்புக் கவிதை
இறுகிய மனம்
குறுகிய எண்ணம்
சறுக்கவே செய்திடும்
சிறாத்தல் முஸ்தகீனிலே
*
பேணுதல் இல்லாத
கோணுதல் வாழ்வு
நாணுமே ஓர்நாள்
நாளை மஹ்ஷரிலே
*
நற்குணம் குன்றிய
கற்குண மனிதர்கள்
பற்றிய பாவத்தினால்
பற்றியெரிவரே நரகிலே
*
ஹராத்திலே தேடிய
கீராத்தளவு செல்வங்கள்
பாரத்தைக் கூட்டுமா
பரிசுத்த மீஸானிலே
*
பட்டங்கள் பதவிகள்
கொட்டங்கள் எல்லாம்
எட்டிடச் செய்யுமா
பட்டோலையை வலக்கரத்திலே
*
சூழ்நிலை புரிந்து
ஆழ்ந்து தெளிந்தால்
தாழ்ந்து போகாது
தம்நிலை மறுமையிலே
(பஸ்லா பர்ஸான்
காத்தான்குடி)
காத்தான்குடி பஸ்லா பர்ஸான் எழுதிய "புரிந்து தெளிக" சிறப்புக் கவிதை
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 25, 2025
Rating:

கருத்துகள் இல்லை: