பாடசாலை சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது கல்வி சீர்திருத்தங்களின் ஒரு நோக்கம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மாணவர்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் வெவ்வேறு கலாச்சாரங்களில் உள்ள அழகியல் பாடத்தின் மூலம் வெற்றிகரமாகச் செய்ய முடியும்..
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அனைத்து இலங்கை மாணவர்களுக்கும் அனைத்து கலாச்சாரங்களிலும் காணப்படும் அழகியல் பாடங்களைப் பற்றிய எளிய புரிதலையும் அங்கீகாரத்தையும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதனூடாக, பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்று,இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாடசாலை சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது கல்வி சீர்திருத்தங்களின் ஒரு நோக்கம் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் செயல்பாடு சார்ந்த கல்வி முறையை நோக்கி நகரும்போது, எதிர்காலத்தில்பாடசாலைகளில் மதக் கல்வியும் செயல்பாடு சார்ந்ததாக மாறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கள மொழி மூலம் இஸ்லாம் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்கும் முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, தொடர்புடைய புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் தேவைக்கேற்ப ஆட்சேர்ப்புகளைச் செய்யலாம் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்
பாடசாலை சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது கல்வி சீர்திருத்தங்களின் ஒரு நோக்கம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: