காத்தான்குடி ஸாவியா மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக அஸ்மியா றிஸ்வி நியமனம்
காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தின் புதிய அதிபராக அஸ்மியா றிஸ்வி (SLPS) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.
மட்டக்களப்பு மத்தி வலயயம், காத்தான்குடி கோட்ட பாடசாலைகளில் ஒன்றான பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் தற்போது பதில் அதிபராக கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் அமைச்சினால் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவர் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலய முன்னாள் அதிபரும் அந்-நாசர் மகா வித்யாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபருமாகிய உதுமான் ஸாஹிப் அவர்களின் மரு மகளுமாவார்.
காத்தான்குடி ஸாவியா மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக அஸ்மியா றிஸ்வி நியமனம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: