வடக்கு,கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு 309 புதிய சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாம் தரத்திலான தாதிகளாக நியமனம் பெற்ற இந்த புதிய தாதியர்கள் 2019 ஆம் ஆண்டு மாணவ தாதியர்கள் குழுவின் கீழ் மூன்று வருடங்கள் தாதிய பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவத் தாகிகளாகும்.
பேச்சு சிகிச்சை உத்தியோகத்தர்களாக நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பேச்சு மற்றும் மொழி சிகிச்சை விசேட பட்டத்தை பூர்த்தி செய்து அதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சினால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்து அவசியமான சகல தகைமைகளையும் பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் என்பதுடன் மூன்றாம் தரத்திலான மருந்தாளர்களாக நியமனம் பெற்ற இந்த உத்தியோகத்தர்கள் இரண்டு வருடங்கள் மருந்தாளர் டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மற்றும் அவசியமான ஏனைய தகைமைகளையும் பூரணப்படுத்திய உத்தியோகத்தர்களாவர்.
தரமான மற்றும் உகந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை தொடர்ந்து பராமரிக்கும் நோக்கத்துடன், இந்தப் புதிய அதிகாரிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, 15.10.2025 முதல், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபையால் நடாத்தப்படும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமனக் கடிதங்களை வழங்கும் போது கருத்து தெரிவிக்கையில்; சுகாதார சேவையை மையமாகக் கொண்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவை இந்த நாட்களில் நாட்டின் அரச கொள்கைக்கு இணங்க சுகாதாரக் கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கான சகல துறைகளையும் உள்வாங்கியவாறு சிறந்த சுகாதார சேவை நாட்டுக்கு வழங்குவதை கருத்தில் கொண்டு இந்த சுகாதாரக் கொள்கை சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன் விசேட அம்சமாக தொற்றா நோய் கட்டுப்பாடு, அதற்கான சிகிச்சை, உளநல சுகாதாரம், போசாக்கு போன்ற துறைகளுக்காக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவ்வாறு இதனை முன்னிட்டு பொருத்தமான உபாய வழிகளை திட்டமிட்டு வருவதாகவும் இந்த வருடத்தின் நிறைவுக்கு முன்னர் அந்த செயற்பாடுகளை முடிவெடுத்துவதற்கு இயலும் என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி சுகாதார சேவைக்காக அவசியமான நிதி அனைத்தையும் வழங்குவதாகவும் நினைவூட்டிய அமைச்சர், கடந்த மார்ச் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தின் 604 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதனை ஒத்த நிதியை சுகாதார சேவைக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மேலும் விபரித்தார்.
மேலும் தாதிய உத்தியோகத்தர்கள் போதிய அளவில் நாட்டின் சுகாதார சேவைக்காக அவசியமாக காணப்படுவதாகவும், அதனை பூரணப்படுத்துவதற்காக பயிற்சியுடன் கூடிய குழுக்களை உள்வாங்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அமைச்சர், 875 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாகவும், அந்தக் குழுவிற்கான ஆறு மாத வதிவிட மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சி இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அந்த தாதிய உத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்; 2900 சுகாதார சேவை உதவியாளர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1900 வெற்றிடங்கள் இந்த வருடம் நிறைவுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் எவ்வித தாமதமும் இன்றி முறையான திட்டமிடலுக்கு ஏற்ப இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்க சேவையில் சம்பள அதிகரிப்பினால் அரசாங்கம் எதிர்பார்ப்பது பணியாளர்களை அரசு சேவையில் திருப்தியுடன் தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அணில் ஜயசிங்க, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) சாமிக கமகே, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உட்பட சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள், வைத்தியசாலை நிருவாகிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட சகல சுகாதார சேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2025
Rating:

கருத்துகள் இல்லை: