முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் நியமனம்; நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக நியமிக்கப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள் இன்று (11) சனிக்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
போரத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டம் இன்று கொழும்பில் போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி, அவரது கடந்த கால சேவைகளின் பதிவுகள் அடங்கிய புகைப்படப் பேழை பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அவரது ஆலோசனைகள், வழிகாட்டல்களை தொடர்ந்தும் அமைப்பிற்குப் பெற்றுக் கொள்ளும் வகையில், அமைப்பின் ஸ்தாபக போஷகராக என்.எம். அமீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் நியமனம்; நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2025
Rating:



கருத்துகள் இல்லை: