காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு
இவ் வருட ஆங்கில தினப் போட்டித் தொடரில் Hand Writing - Print நிகழ்வில் கோட்டம் மற்றும் வலயம் ஆகியவற்றில் முதலாம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற தரம் 7 மாணவி MJ.Zeenath Lifrah கடந்த வாரம் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்ட காலத்திற்கு பின்னர் ஆங்கில தினப் போட்டியில் எமது பாடசாலை பெற்றுக் கொண்ட மாகாண மட்ட வெற்றி என்பதுடன் தேசிய மட்டத் தெரிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் வெற்றிச் சாதனையினைப் பெற்ற மாணவிக்கும் முழுமையான பயிற்சிகளை வழங்கி தயார்படுத்திய ஆசிரியைகளான Mrs. Thasneema Lareef, Mrs.Nasooha Hazeeb மற்றும் Mrs.Zafra Rulfan ஆகியோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
தேசியப் போட்டியிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் சங்கம்.
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2025
Rating:

கருத்துகள் இல்லை: