இலங்கை திருநாட்டில் விஷ போதைப்பொருளினை ஒழித்திடும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
இலங்கை திருநாட்டில் விஷ போதைப்பொருளினை முற்றாக அழிக்கும் " முழு நாடும் ஒன்றாக " எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று(30) ஜனாதிபதி அனுர திசாநாயக்க அவர்களினால் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கபப்ட்டுள்ளது.
"அகன்று செல் " எனும் தொனிப்பொருளிலான இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு அ .உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக முகாமைத்துவ குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நிழ்ச்சியின் சம நேரத்தில் நிகழ்நிலையில் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தடுப்பு, மறுசீரமைப்பு மற்றும் விழிப்புணர்வு என்னும் மூன்று படிநிலைகளினை கொண்ட இவ் வேலைத்திட்டத்தில் முனைப்புடன் பங்கு கொள்வோம் எனும் உறுதியுரையினையும் இவ் உத்தியோகத்தர்கள் மனமார ஏற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு.
இலங்கை திருநாட்டில் விஷ போதைப்பொருளினை ஒழித்திடும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 30, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 30, 2025
Rating:








கருத்துகள் இல்லை: