அவள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவர். ஒரு முஸ்லிம் பெண் தெற்காசியாவின் வேகமான பெண்னாக மாறி உள்ளார்
அவள் செய்தது அழகானது, இன்னும் அழகுபடுத்தி இருக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்பு கல்வி அமைச்சில் கெளரவ கல்வி அமைச்சருடன் கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் எம்மிமடம் ஒரு முக்கிய விடயம் பற்றி கலந்துரையாடினார்.அவர் எங்களிடம் கேட்டார் .முஸ்லிம் மாணவிகள்/பெண்கள் அழகியல் உணர்வுகள் குறைவானதா? அல்லது அதற்கு ஏதாவது உங்கள் கலாசாரத்தில் தடை உள்ளதா எனக் கேட்டார்.
அவரிடம் எங்களுக்கு என தனித்துவமான அழகியல் விடயங்கள் உண்டு என நானும் என்னுடன் இருந்த பல முக்கிய பாடசாலைகள் அதிபர் ,உலமாக்கள்,கல்வி அதிகாரிகள் தெளிவாக சொன்ன போது நீங்கள் அவற்றை தொகுத்து எடுங்கள் அவற்றை நாம் பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்க முடியும் எனக் குறிப்பிடரடார்.
ஒரு முஸ்லிம் பெண் தெற்காசியாவின் வேகமான பெண்னாக மாறி உள்ளார்.எம்மில் பலர் அவரது ஹிஜாப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர். எங்களில் எத்தனைப் பேர் எமது பெண்களின் விளையாட்டு, உடற்பயிற்சிற்கு பிரத்யேகமான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.எத்தனை ஊர்கள் பெண்களுக்கான விளையாட்டு மைதானங்களை அமைத்துள்ளோம்.
இஸ்லாமிய தீர்வுகளை முன்வைக்க முன்பு இஸ்லாமிய மாற்றீடுகளை அறிமுகம் செய்ய வேண்டும்.வைத்தியர்களிடம் கேளுங்கள் எங்கள் பெண்கள் போதுமான உடற்பயிற்சி இன்றி தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் .எமது தாய் ,சகோதரி, மனைவி ,மகள்களின் உடல் ஆரோக்கியம் ,திறமை தொடர்பில் எந்த அளவு கவனம் செலுத்துகின்றோம்.
சபியா சமூகத்தில் ஒரு அழகிய கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்துள்ளார்.நாம் எத்தனை சபியாக்களை எமது வீட்டில் வைத்துள்ளோம்.அவர்களுக்கு ஹிஜாபுடன் விளையாட பழக்காமல் ,அனுமதிக்காமல் எப்படி தேசிய ,சர்வதேச விளையாட்டுகளில் ஹிஜாப் பெண்கள எதிர்பார்க்க முடியும் .எமது பெண் ஆளுமைகளை இஸ்லாமிய விழுமியங்களுடன் வளர்வதற்கு உரிய ஒழுங்குகளை செய்யுங்கள்.
இந்த நாட்டில் யாரும் ஹிஜாபுடன் விளையாடுவதை தடை செய்யவில்லை என்பது மட்டுமல்ல பலர் விளையாடுகின்றனர்.
சபியாவின் தனிப்பட்ட தேர்வில் எமக்கு ஓரு நிலைபலபாடு இருக்க முடிம்.ஆனால் அதை பொதுமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாம் அழகியலை ,விளையாட்டை தடை செய்யவில்லை ஆனால் அதற்கான தெளிவான வழிகாட்டலை வழங்கி வழங்கியுள்ளது.
நாம் வழிகாட்டலை வழங்காமல் ,அனுமதிக்காமல் அந்தப் பிள்ளையை குறை காண முடியாது. அவள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவர்.அது சாதாரண தீர்மானம் அல்ல அவள் படித்த பாடசாலை ,வாழ்ந்த சூழல் பல தீர்மானங்களை மேற் கொள்ள வழிகாட்டியுள்ளது.
அவளுக்கு விமர்சனங்களை முன் வைக்க முன்பு நீங்கள் வசிக்கும் பிரதேசங்களில் ஹிஜாபுடன் போட்டிகளில் கலந்து கொள்ளும் கலாசாரத்தை ஊக்குவியுங்கள். மீளவும் செல்கின்றேன் அவளின் செயல் நாட்டிற்கு அவசியமானது. ஒரு இலங்கையனாக மகிழ்ச்சி அடைவோம்.
அவளது ஹிஜாப் விவகாரத்தை முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்த சில ஊடகங்கள் முற்படுவது தெளிவாக தெரிகிறது. நாம் அதற்கு தீனி போடக் கூனாது.
இது கலந்துரையாடளுக்கான பதிவு.
எம்.என் முஹம்மத்.
அவள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவர். ஒரு முஸ்லிம் பெண் தெற்காசியாவின் வேகமான பெண்னாக மாறி உள்ளார்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:

கருத்துகள் இல்லை: