வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரி – காத்தான்குடியில் “எக்ஸத் ஊடக வலையமைப்பு” ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில்,விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட “வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு” இன்று (18) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமத் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எல்எம். ஷாஜஹான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பின், தலைவரும் ஆய்வாளருமான சட்டமாணி பி.எம். முஜிபுர் ரஹ்மான், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான சட்டத்தரணி இ.எம். றுஸ்வின், ஏ.எம்.எம். பர்ஸாத் உட்பட முன்னாள் இராணுவ ஓய்வுநிலை அதிகாரிகளான மேஜர் ஜூனைத் நபீர், சாஜன் மேஜர் புஹாரி, சாஜன் மேஜர் ஹாஜா முகைதீன், தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதி யூ.எல்.எம். முபீன்,
யாழ் மாநகர சபை உறுப்பினரும், யாழ் முஸ்லிம் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான பீ.எஸ்.எம்.ஷரபுல் அனாம், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உபசெயலாளர் எம்.ஐ.எம்.இர்பான், அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜூனைதீன், ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் எம்.ஐ.எம்.நாஸர் ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சாஜன் மேஜர் ஆர்.எஸ்.பி. புஹாரி மற்றும் வட மாகாண மக்களின் உரிமைக்காக தொடர்ந்து பங்காற்றி வரும் சட்டமாணி பி.எம்.முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பிக்கவுள்ள மகஜர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டாளர் எம்.ஏ. அஸீஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அத்தோடு, வட மாகாண முஸ்லிம்கள் சார்ந்த சட்டத்தரணி கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய “சிலுவை சுமந்த பயணம்” எனும் கவிதை நூலும் வெளியிடப்பட்டதோடு, நூலின் முதல் பிரதியை ஸ்ரீலங்கா சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், கபே நிறுவனத்தின் தேர்தல் கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளருமான ஏ.எல்.எம். மீராசாஹிபு அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரி – காத்தான்குடியில் “எக்ஸத் ஊடக வலையமைப்பு” ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு.!!!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 18, 2025
Rating:

கருத்துகள் இல்லை: