கலி கம்பு (கோலாட்டம்) போட்டியில் காத்தான்குடி அந்-நாஸர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு.
முஸ்லிம் கலாச்சாரப் போட்டி மாகாண மட்டம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சார்பாக கலிகம்பு (கோலாட்டம்) போட்டியில் பங்கு பற்றிய காத்தான்குடி அந்-நாஸர் மகா வித்தியாலய மாணவர்கள் முதலாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வாய்பினை பெற்றுள்ளனர்.
பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்து வெற்றி பெற்ற இம்மாணவச் செல்வங்களுக்கும் இவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் திருமதி.S.சாஜஹான் அவர்களையும்,
மாணவர்களை
பயிற்றுவித்த காத்தான்குடி சிறுவர் நிலையத்தின் முகாமையாளர் ஜனாப்.S.அலாவுதீன் அவர்களையும்,
மாணவர்களை அழைத்துச் செல்ல வாகன வசதியளித்த காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவரும் இஸ்மாயீல் ஸ்டோர் உரிமையாளர், உபைத் ஹாஜியார் அவர்களுக்கும், பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிபர், ஆசிரியர்கள்,
பாடசாலை அபிவிருத்தி, நிறைவேற்றுக்குழு.
கலி கம்பு (கோலாட்டம்) போட்டியில் காத்தான்குடி அந்-நாஸர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 07, 2025
Rating:

கருத்துகள் இல்லை: