காத்தான்குடி நகரசபை ஏற்பாட்டில் சாஹிரா வலது குறைந்தோர் பாடசாலைக்கு நடமாடும் நூலக சேவை
காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் 2025 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் செயற்திட்டங்களை நடாத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக இன்று 23.10.2025 விசேட தேவை உடையவர்களுக்கான வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் முகமாக காத்தான்குடி சாஹிரா வலது குறைந்தோர் பாடசாலைக்கு நடமாடும் நூலக சேவை ஒன்று காத்தகன்குடி நகர சபை தவிசாளர் SHM. அஸ்பர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில்
காத்தான்குடி நகரசபை
செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ் , பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்
M.மாஹிர் , நூலகர் பெளமியா ஷறூக், பொது நூலகர் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது
மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பரிசில் பொதிகளும் வழங்கி மாணவர்களை மகிழ்வித்தமை விசேட அம்சமாகும்.
காத்தான்குடி நகரசபை ஏற்பாட்டில் சாஹிரா வலது குறைந்தோர் பாடசாலைக்கு நடமாடும் நூலக சேவை
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 23, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 23, 2025
Rating:












கருத்துகள் இல்லை: