Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி அல்ஹிரா மாணவன் நஸீம் ஸைதின் முன் மாதிரியும் பிரமாண்ட சதுரங்கப் போட்டியும்..


காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்று வரும் மாணவன் நஸீம் ஸைத் தனது இளம் வயதிலேயே பல்வேறு சதுரங்க போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் கேடயங்களையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கின்றார். மேலும் தனது சொந்த முயற்சியில் Royal Chess Club  என்ற பெயரில் சதுரங்க அணி ஒன்றினை உருவாக்கி தொடர்ச்சியாக பயிற்றுவிப்புகளை வழங்கி வருகின்றார். மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு போட்டிகளுக்கும் தனது அணிப் போட்டியாளர்களை அழைத்துச் சென்று வெற்றிகளையும் பெற்றிருக்கின்றார். 


அந்தத் தொடரில் கடந்த 2025.10.06 திங்கட்கிழமை தனது Royal Chess Clubன் ஏற்பாட்டில் பிரம்மாண்டமான சதுரங்க போட்டி ஒன்றினை காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில்  அமைந்துள்ள தனது இல்லத்தில் நடாத்தி முடித்திருக்கின்றார். காத்தான்குடி, காங்கேயனோடை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் இருந்து 29 மாணவ மாணவிகள் மேற்படி சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். 


போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்களும் சிறந்த முறையில் விளையாடிய 10 மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டதோடு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மூன்று மாணவர்களுக்கு நினைவுக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு மிகச் சிறிய வயது விளையாட்டு வீரர் ஒருவருக்கு விஷேட விருது ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. 


இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு மத்தியில் பல மாணவர்கள் தமது ஓய்வு நேரங்களை வீணாக கழித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு வருமானம் தரக்கூடிய சதுரங்கப் பயிற்சியாளராக கடமையாற்றுவதோடு தரம் 10 கல்வி கற்கும் நிலையில் ஒரு பிரமாண்டமான சதுரங்க சுற்றுப்போட்டியையும் ஏற்பாடு செய்தமை இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

காத்தான்குடி அல்ஹிரா மாணவன் நஸீம் ஸைதின் முன் மாதிரியும் பிரமாண்ட சதுரங்கப் போட்டியும்.. Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 07, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.