Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புத்தளத்தின் இஷாம் மரிக்கார்–துபாயில் நடைபெறும் ஆசிய பசிபிக் நகர மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்


(ஜெ.எல்.ஷாஜஹான்)

இலங்கையின் புத்தளம் நகரத்தைச் சேர்ந்த “இரவு மேயர்” என மக்களிடையே பிரபலமான இஷாம் மரிக்கார், வரும் ஆசிய பசிபிக் நகர மாநாடு (Asia Pacific Cities Summit 2025) மற்றும் மேயர்கள் மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்து
வப்படுத்தவுள்ளார். 

இந்த மாநாடு 2025 அக்டோபர் 27 முதல் 29 வரை துபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் மேயர்கள், நகர தலைவர்கள், திட்டமிடல் நிபுணர்கள், புதுமையாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாகும். 

இவ்வாண்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கும் ஏகை இலங்கை பிரதிநிதி இஷாம் மரிக்காராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஷாம் மரிக்கார் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக (IT Consultant) பணியாற்றிய அனுபவமுள்ளவர். 

பின்னர் அவர் தனது சொந்த ஊரான புத்தளத்துக்குத் திரும்பி அரசியலில் இணைந்து மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றார். 

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரவு நேரங்களிலும் பணி புரியும் அவரது பண்பால் மக்கள் அவரை “இரவு மேயர்” என அழைக்கத் தொடங்கினர்.

அவர் தமது பங்கேற்பின் மூலம் இலங்கை மற்றும் வளைகுடா நகராட்சிகளுக்கு இடையே தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுப்பொருள் மேலாண்மை போன்ற துறைகளில் ஒப்பதங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ஆசிய பசிபிக் நகர மாநாடு 2025 இல் 100க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 

துபாய் மீண்டும் உலக நகர வளர்ச்சி உரையாடலின் முக்கிய மையமாக திகழும் நிலையில், இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இஷாம் மரிக்கார் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
புத்தளத்தின் இஷாம் மரிக்கார்–துபாயில் நடைபெறும் ஆசிய பசிபிக் நகர மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 22, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.