புதிதாக நியமிக்கப்பட்ட வலுசக்தி பிரதி அமைச்சர் உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்தார்.
வலுசக்தி பிரதி அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட அர்கம் இல்யாஸ் நேற்று (24) தனது உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்தார்.
நாட்டின் பல்சக்தி துறையின் அவசியத் தேவை, சவால் மற்றும் இலக்குகளை அடையாளம் கண்டு அரசாங்கத்தின் வலுசக்தி கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு மற்றும் அதனை முன்னேற்றுவதற்கும் ,அதனால் நாட்டு பொது மக்களின் தேவைப்பாடுகளை திருப்தியாக பூர்த்தி செய்யும் நோக்குடன் பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தனது கடமைகளை ஆரம்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான லால் பிரேமநாத், ருவன் மாபலகம, வலுசத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 25, 2025
Rating:

கருத்துகள் இல்லை: