Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2026 அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 'சமூக சக்தி' கிராமிய அபிவிருத்தி பிரவேசம் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது

2026 அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 'சமூக சக்தி' கிராமிய அபிவிருத்தி பிரவேசம் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது

2026 ஆம் ஆண்டில் கிராமிய அபிவிருத்திக்கு 180 பில்லியன் ரூபா
- நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
 
சமூக வலுவூட்டல் மற்றும் சமூகத்திற்குள் பொருளாதார நன்மைகள் சமமாகப் பகிரப்படுதலை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான "சமூக சக்தி" தேசிய செயற்திட்டம் குறித்து நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வு, (22) அலரி மாளிகையில் நடைபெற்றது.
 
சமூக சக்தி செயற்திட்டத்தை கீழ் மட்டத்தில் செயல்படுத்துவது குறித்து பிரதேச செயலாளர்களுக்கு இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அரச சேவை மறுசீரமைப்பின் அவசியம், அபிவிருத்தி தொடர்பில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், சமூக சக்தி செயற்திட்டத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தளங்களை அறிமுகப்படுத்தல், டிஜிட்டல் பொருளாதார செயற்திட்டத்தில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டிற்கு பிரதேச செயலாளர்களின் தீவிர பங்கேற்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கிராமப்புற வறுமையை ஒழிக்க தேசிய தலைமையை வழங்குவது சமூக சக்தி தேசிய செயற்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.
 
இதுவரை தனியான ஒரு அமைச்சுக்கு மற்றும் நிறுவனத்தின் பொறுப்பாக இருந்து வந்த வறுமை ஒழிப்பு, சமூக சக்தி செயற்திட்டத்தின் கீழ் ஒரு பரந்த கூட்டு செயற்பாடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடு எதிர்கொண்டுள்ள நீண்டகால சமூகப் பிரச்சினையான பல பரிமாண வறுமையை ஒழிப்பதற்காக, புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி அணுகுமுறைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க
 
தெரிவித்ததுடன், சமூக வலுவூட்டுகை மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை முக்கிய அணுகுமுறைகளாக இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். மக்களுக்கு நன்மைகளை வழங்குவதில் அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டில் சமூக சக்தி உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 180 பில்லியன் ரூபா, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்ததுடன்,

தற்போது 5% ஆக உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7% வரை அதிகரிப்பதற்கும், மத்திய கால பொருளாதார இலக்குகளை அடைவதற்குமான செயற்திட்டத்தில் பிரதேச செயலாளர்களுக்கு பரந்த வகிபாகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே இதுவரை காலமும் நமது நாட்டில் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் இருந்தன. இன்று தற்போதைய அரசாங்கம் தொடங்கியுள்ள சமூக சக்தி செயற்திட்டத்தைப் பற்றி நீங்கள் தெளிவு பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமூக சக்தி செயற்திட்டம் நான்கு நோக்கங்களைக் கொண்டது.

சமூக சக்தி தேசிய செயற்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களிடையே நிலவும் வறுமையை ஒழிப்பதற்காக தேசிய தலைமையை வழங்குவது அதில் ஒன்றாகும். இது சற்று சிக்கலானதாகத் தோன்றினாலும், இதுவரை இருந்த திட்டங்கள் ஒரு தனி அமைச்சின் அல்லது ஏதோ ஒரு நிறுவனத்தின் பணியாக மாத்திரம் இருந்ததாக நாம் நினைக்கிறோம்.

நாம் அதனை விட அதிகமாக தேசிய தலைமைத்துவத்தின் தேவையை உணர்ந்து, இந்த திட்டத்தை பரந்த அளவில் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டுடன் தேசிய கொள்கை சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி, இந்த தேசிய கொள்கை சபைக்கு தலைமை தாங்குகிறார். இரண்டாவதாக, கிராமப்புற வறுமையை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேலிருந்து கீழாக தனிப்பட்ட அமைச்சு மற்றும் நிறுவனங்களால் வறுமை ஒழிக்கப்படுகிறது என்ற கருத்துக்கு பதிலாக ஒருங்கிணைந்த அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையில் 25 அமைச்சுகளும் கிராமப்புற வறுமை ஒழிப்பில் ஈடுபட்டுள்ளன என்றாலும், தற்போது நேரடியாக சம்பந்தப்பட்ட 9 அமைச்சுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இதில் நேரடியாக செயற்படும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக, நிர்வாகத் துறையில் ஒரு கூட்டு செயற்பாட்டுக் குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். இந்த திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் ஆகிய நிர்வாக அதிகாரிகள் இந்த கூட்டு கட்டமைப்பில் உயர் மட்டத்தில் தொடர்பு படுவார்கள்.

மூன்றாவதாக, சமூக பங்கேற்பு அபிவிருத்தி அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எளிமையானது என்றாலும், அபிவிருத்தி என்பது மேலிருந்து கீழாக அன்றி, கீழிருந்து மேலாகவே பயணிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும், நடைமுறையில், கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கி சமூக பங்கேற்பு அபிவிருத்தி அணுகுமுறை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

வறுமை ஒழிப்புத் திட்டங்களின் செயல்திறன் மற்றும் வினைதிறனை பொதுமக்களின் பங்கேற்பு மூலம் கண்காணித்து மதிப்பீடு செய்வதே இறுதி இலக்காகும். இவை சமூக சக்தி தேசிய செயற்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். இன்னும் பல துணை நோக்கங்கள் இருக்கலாம். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகும்.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன -மக்களுக்கு சேவைகளை செயற்திறனாகவும், வெளிப்படையாகவும், நெருக்கமாகவும் வழங்குவதே எமது அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு ஆகும். 

அரச கட்டமைப்பு மேலிருந்து கீழ் வரை ஒவ்வொரு மட்டத்திலும் டிஜிட்டல் மயமாக வேண்டும். அதனூடாக மக்களுக்கு தேவையான சேவைகளை விரைவாக வழங்க முடியும். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பிரதேச செயலகங்களின் செலவைக் குறைக்க முடியும். இந்த நிறுவனங்களுடன் சிறந்த முறையில் எமக்கு பணியாற்ற வேண்டும். இது ஒரு தேசிய வேலைத்திட்டம். எனவே, 2026 ஆம் ஆண்டில் இந்தத் தேவைகளை விரைவாக வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க -
பெரும்பாலும் நாங்கள் உங்களைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்று கூறலாம். பிரதேச செயலாளர்களாக, நீங்கள் ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள். 

நீங்கள் பிரதேச மட்டத்தில் மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறீர்கள். அந்த மக்கள் சேவையின் தரத்தை நாம் மேம்படுத்த வேண்டும். அண்மைய அரசாங்க மாற்றத்துடன், மக்கள் சமூகத்தில் ஒரு பாரிய மாற்றத்தை எதிர்பார்த்தனர். குறிப்பாக, அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை. அரசியல்வாதிகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை இருந்தது.
 
அடுத்து, மக்கள் அரச அதிகாரிகளை நோக்கி விரல் நீட்டினர். சமூகத்தைப் பார்க்கும்போது, ​​விரல் இன்னும் அதிகாரிகள் மீது நீட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அரசியல்வாதிகள் மீதான மக்களின் எதிர்ப்பின் காரணமாக, அரசியல்வாதிகள் இப்போது குறிப்பிட்ட மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். அரச அதிகாரிகளாக, மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு நாமும் இணங்க வேண்டியிருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
பல வருடங்களாக ஒரு குறிப்பிட்ட முறையைின் படி நமது கடமைகளைச் செய்து வருகிறோம். ஆனால் இப்போது நாம் சில மாற்றங்களைச் செய்யத் தயாராக வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த நாம் அணிதிரள வேண்டும். பல பிரதேச செயலாளர்கள் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த அரச அதிகாரிகள். இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய ஒரு குழு. அரச திட்டங்களை செயல்படுத்துவதில் உங்கள் நிறுவனம் மிகவும் திறமையானதாக மாற்றப்பட வேண்டும்.

அரசாங்கம் பணம் ஒதுக்கினாலும், பணிகள் அலட்சியமாகவே நடைபெறுவதாக மக்களிடமிருந்து ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டங்களை செயல்படுத்தும்போது நாம் மாறி புதிய முறையில் சிந்திப்போம். 

குறிப்பாக, இந்த செயற்திறனான திட்டத்திற்கு உங்கள் பிரதேச செயலகத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளோம். நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்த அரசாங்கம் பெரும் முயற்சிகளைச் செய்து வருகிறது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, கபில ஜனக பண்டார, ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஜே.எம். விஜேபண்டார, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.ஜே. நிலுக்ஷான், இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பணிப்பாளர் புத்திக ஜயதிஸ்ஸ ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
2026 அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 'சமூக சக்தி' கிராமிய அபிவிருத்தி பிரவேசம் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 24, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.