திருகோணமலையில் நடந்தது என்ன? முழுமையான விசாரணை அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி!
திருகோணமலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிக்கை கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல் நடந்தால் அதற்கு எதிராக போராடலாம், ஜனநாயக மீறல்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம். பொருளாதாரம் சரிந்தால் அதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் தோல்வி கண்ட தரப்புகள் இனவாத சூழ்நிலையை ஏற்படுத்த முற்படுகின்றன.
இப்பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளேன். எமது நாட்டில் இனவாதத்துக்கு இடமளிக்கமாட்டேன். பௌத்த மக்களும் இடமளிக்கமாட்டார்கள். பொதுவாக அனைத்து இன மக்களும் இனவாதத்தை நிராகரிக்கின்றனர்.
எனவே, பழைய இனவாத நாடகங்கள் இனி இந்நாட்டில் எடுபடாது. இனவாதத்தை இனி அரசியல் வரலாற்றை எழுத முடியாது.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 18, 2025
Rating:

கருத்துகள் இல்லை: