விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்து அறிவூட்டுவதற்கான முதலாவது செயலமர்வுத் தொடர்
விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ அறிவியல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து அறிவூட்டும் நோக்குடன், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள விளையாட்டு மருத்துவ நிறுவனம் முதன்முறையாக ஏற்பாடு செய்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ அறிவியல் செயலமர்வுத் தொடர் அண்மையில் நடைபெற்றது.
அதன் விளையாட்டு மருத்துவ அறிவியல் மாநாடு (நவம்பர் 15) CEWAS நிறுவனத்தில், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ சுகத் திலகரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்துவது மற்றும் தரவுகளைப் பெறுவது குறித்து ஆய்வாளர்கள், வைத்தியர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு அறிவு வழங்கப்பட்டது.
இத்தகைய மாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செயலமர்வுத் தொடர் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் விளையாட்டை வெற்றிக்கு இட்டுச் செல்ல தேவையான ஆய்வுத் தரவுகளை துல்லியமாகப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 17, 2025
Rating:

கருத்துகள் இல்லை: