விக்டோரியா அணைக்கட்டு உடையப் போகிறது என்ற வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை
தற்சமயம் விக்டோரியா அணைக்கட்டு உடையப் போகிறது என்ற வதந்திகள் மக்கள் மத்தியில் பரவி வருவதாக விக்டோரியா மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் ஜி.டி.ஐ. சாந்த தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்...
விக்டோரியா மின் நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களும் அமைப்புடன் இணைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அத்துடன், மின் நிலையத்தின் செயல்பாடுகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், விக்டோரியா அணைக்கட்டின் செயல்பாடுகள் குறித்த மேலதிக தகவல்களை மகாவலி அதிகாரசபையிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 29, 2025
Rating:

கருத்துகள் இல்லை: