இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பு – மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கி வைப்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்&பஹத் ஜுனைத்)
இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பின் (YESDO) தலைவர் எம்.ரி.எம். இர்பான் தலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) காத்தான்குடி அல் மனார் மண்டபத்தில் “ஒரு திறமைசாலிக்கான தெளிவான பார்வை: எதிர்காலம்” எனும் கருப்பொருளில் மாணவர்களுக்கான “இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு – 2025” இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள பாலமுனை, காங்கேயனோடை பகுதிகளைச் சேர்ந்த 80 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மொறட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் என்.எம்.எம். நிஹாஜ், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் எம்.இஸட்.ஏ. ஸக்கி ஆகியோர் பங்கேற்றனர்.
கெளரவ அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் கபூர் மதனி, காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் நித்யா, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா கோரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பு – மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கி வைப்பு.!!!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:






















கருத்துகள் இல்லை: